தி கேரளா ஸ்டோரி’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மதச்சார்பற்ற கேரளாவில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் தி கேரளா ஸ்டோரி என்ற இந்தி படத்தின் ட்ரெய்லர் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இது சங்பரிவார் சித்தாந்தத்தை பரப்புவதற்காக எடுக்கப்பட்ட படம் என்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது என்றும் அவர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை ஆப்கானிஸ்தானுக்கு அழைத்துச் சென்று அங்கு கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்துக்கு மாறி ஐஎஸ்ஐ அமைப்பில் சேர வைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.