திருப்பதியில் நவம்பர் 18ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா
திருப்பதி: கார்த்திகை மாத அமாவாசையை கொண்டாடும் வகையில், திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக கட்டிட மைதானத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 18ம் தேதி நடக்கிறது.
இதற்காக நிர்வாக மைதானத்தில் கார்த்திகை தீபத்திருவிழா நடத்த விரிவான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் இந்த நிகழ்ச்சியை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நேரடியாக ஒளிபரப்புகிறது.