-Advertisement-
தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவைகளை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. ஏற்கனவே நாட்டின் பல நகரங்களில் 5ஜி சேவையை வழங்கியுள்ளது.
இந்நிறுவனம், தற்போது மேலும் 50 நகரங்களில் தனது ட்ரூ 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ 17 மாநிலங்களில் உள்ள 50 நகரங்களில் இவற்றைத் தொடங்கியுள்ளது.
-Advertisement-
இதில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, அசாம், கோவா, ஹரியானா, மகாராஷ்டிரா, கேரளா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கும்.
ஒரு அறிக்கையின்படி, சந்தாதாரர்கள் எந்த கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் வரம்பற்ற 1Gbps வேக இணையத்தைப் பயன்படுத்தலாம் என்று ஜியோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஜியோ தற்போது நாடு முழுவதும் 184 நகரங்களில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது.
-Advertisement-