ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை 15 முதல் 25 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
5ஜி தொழில்நுட்ப சேவைகளை விரிவுபடுத்தவும், வளர்ந்து வரும் இணைப்புகளுக்கு ஏற்ப நெட்வொர்க் சேவை திறனை அதிகரிக்கவும் கட்டண உயர்வு அவசியம் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய 5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக சுமார் 11,000 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த நிலையில் நிதி திரட்ட கட்டண உயர்வை அறிவித்துள்ளது.