ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் 26 தொகுதிகளுக்கு இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட தேர்தலில் 26 தொகுதிகளில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உட்பட 239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதே நேரத்தில், 25 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துகின்றனர்.
இரண்டாம் கட்ட தேர்தலை ஒட்டி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நிறைவடைந்தது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக 26 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மீதமுள்ள 40 தொகுதிகளுக்கு 3வது கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1ம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணப்பட்டு அக்டோபர் 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.