‘சந்திராயன்-4’ திட்டம் குறித்து முக்கிய தகவல் அளித்த இஸ்ரோ தலைவர்!

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத் நிலவில் அதிக சோதனைகளை மேற்கொள்ளும் நோக்கில் ‘சந்திராயன்-4’ ஏவுதல் குறித்த முக்கிய அறிவிப்பை வழங்கினார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோம்நாத் பங்கேற்று பேசினார். விண்வெளி ஆய்வு என்பது ஒரு தொடர்ச்சியான செயல். இதில் நமது நாடு (இந்தியா) பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது என்றார். நிலவில் அடுத்த பயணத்தை மேற்கொள்ள இஸ்ரோ உறுதிபூண்டுள்ளதாக அவர் நிகழ்ச்சியில் தெரிவித்தார். 2040-ம் ஆண்டுக்குள் நிலவில் தரையிறங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், அதற்கான பணிகளை இஸ்ரோ தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

 
 
 
Exit mobile version