இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மற்றொரு மாபெரும் ராக்கெட் ஏவலுக்கு தயாராக உள்ளது. விஞ்ஞானிகள் எல்விஎம்-3 ராக்கெட்டை மார்ச் 26 ஆம் தேதி விண்ணில் செலுத்தவுள்ளனர்.
எல்விஎம்-3 ஏவுகணை மூலம் 36 செயற்கைக்கோள்களை நிலையான சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஒத்திகை வெற்றி பெற்றதால், இஸ்ரோ இந்த சோதனையை ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் மார்ச் 26 காலை மேற்கொள்ளவுள்ளது.
முதற்கட்டமாக கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி 36 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 36 OneWeb செயற்கைக்கோள்களின் முதல் தொகுதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதுவும் வெற்றி பெறும் என விஞ்ஞானிகள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.