இந்தியாவில் உள்ள இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான மும்பை விமான நிலையத்தில் கார்பன் வெளியீட்டை தவிர்க்க, மின்சார வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் நுழைவு வாயிலாக திகழ்கிறது. இந்த விமான நிலையம் நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விமான நிலையங்களில் கார்பன் வெளியீடு காரணமாக ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் கார்பன் வெளியீட்டை குறைக்க பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கார்பன் வெளியீடு காரணமாக புவி வெப்பமடைதல் அதிகமாக ஏற்படுகிறது.
- Advertisement -
அதனால் பல நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்துள்ளது. அதே போல இந்தியாவிலும், கார்பன் வெளியீட்டை குறைக்க புதிய ஆற்றல் மூலங்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் முதற்கட்டமாக மும்பை விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் பெரும்பாலும் மின்சார வாகனங்கள் பயன்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக 45 மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு இதன் எண்ணிக்கை 60 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.