இந்தியா

நாளை விண்ணில் ஏவப்படும் ‘இன்சாட்-3டிஎஸ்’ செயற்கைக்கோள் – இஸ்ரோ தகவல்

இயற்கை பேரிடர் மற்றும் வானிலை நிலையை முன்கூட்டியே கண்டறிவதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்சாட்-3டிஎஸ் என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. 2274 கிலோ எடை கொண்ட ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் செயற்கைகோளை சுமந்து செல்ல தயாராக உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

மேலும், இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நாளை (பிப்ரவரி 17) மாலை 5:30 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. எரிபொருள் கண்காணிப்பு உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், இன்று (பிப்ரவரி 16) முதல் கவுன்ட் டவுன் தொடங்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

42 − thirty six =

Back to top button
error: