இந்தியா

இந்திய கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது: மூன்று வீரர்கள் மாயம்!

இந்திய கடலோர காவல்படையின் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் குஜராத்தின் போர்பந்தர் கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

மீட்பு பணிக்கு செல்லும் வழியில் அவசரமாக தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது. அப்போது ஹெலிகாப்டரில் 4 பேர் இருந்த நிலையில் அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டார். இந்திய கடலோர காவல்படையை சேர்ந்த 3 வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.

அந்த 3 வீரர்களை தேடும் பணியில் 4 கப்பல்கள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!