புதுடெல்லி:
இந்தியா 2032ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாடாக மாறும் என பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் (CEBR) தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டு நிலவரப்படி இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக நாடாக உள்ளது. மேலும், 2035-ம் ஆண்டுக்குள் இந்தியா 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்றும் அறிக்கை கூறுகிறது. மேலும், அடுத்த ஆண்டு முழு உலகமும் பொருளாதார மந்த நிலைக்குச் செல்லும் என்று CEBR கணித்துள்ளது.
குறிப்பாக, உயர் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கடனை அதிக சுமையாக மாற்றும், இதனால் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவைக் காணும் என்று அறிக்கை கூறுகிறது.
இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 100 டிரில்லியன் டாலர்களைக் கடந்தது. ஆனால் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் அடுத்த ஆண்டு வளர்ச்சி குறையும். உயர் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பெரிய பலனைத் தரவில்லை. எனவே, 2023ஆம் ஆண்டிலும் வட்டி விகித உயர்வு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று CEBR அறிக்கை கூறுகிறது.
மேலும், ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்படும் பிரச்சனைகளை விட சீனாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் நிலைமையை தீவிரமாக்கும். இது விலைவாசி உயர்வு மற்றும் மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்று அறிக்கை விளக்கியுள்ளது.