நாடு முழுவதும் நிலவி வந்த வெப்ப அலைகளின் தாக்கம் நேற்றுடன் முடிவுக்கு வந்ததாகவும் இன்று முதல் வெப்ப நிலை குறையத் தொடங்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ஆலங்கட்டியுடன் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் அதற்கான சூழல் உருவாகி உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.