இந்தியா
டெல்லியில் இன்றும் கனமழை.. 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
கேரளாவில் கடந்த மே 30-ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
இதன் விளைவாக, தலைநகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர் கனமழையால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், டெல்லி என்சிஆர் பகுதியில் இன்றும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) அடுத்த நான்கு நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம், இப்பகுதியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது.