நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன்படி இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நீட் தேர்வினை நடத்தி வருகிறது.
இந்நிலையில், நீட் நுழைவுத்தேர்வின் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கு ரூ.1600லிருந்து ரூ.1700, ஓபிசிக்கு ரூ.1500லிருந்து ரூ.1600 ஆகவும், SC/ST ரூ.900லிருந்து ரூ.1000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Leave a Comment