ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூரில் ஹவுரா – சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இந்த விபத்து இன்று செவ்வாய்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஜாம்ஷெட்பூரில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரம்பம்பு பகுதியில் அதிகாலை 3.45 மணியளவில் விபத்து நடந்ததாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் உறுதி செய்தனர்.
இந்த விபத்தில் மொத்தம் 18 பெட்டிகள் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக, ஹவுரா – திட்லாகர் – காந்தபஞ்சி இஸ்பாட் எக்ஸ்பிரஸ், ஹவுரா – பார்பில் ஜனஷ்டாப்தி எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.