மத்திய அரசின் 300 யூனிட் இலவச மின்சார திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

 

இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் மின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு “பிரதான் மந்திரி சோலார் ஹவுஸ் மின்சாரம்” திட்டத்தை தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், மானிய விலையில் வீட்டின் மேற்கூரையில் சோலார் பொருத்துவது மட்டுமின்றி, அவர்களுக்கு 300 யூனிட் மின்சாரமும் இலவசமாக வழங்கப்படும்.

 

solar power pm modi

இதன்படி தனிநபர் வீடு அல்லது நிறுவனத்தின் மேற்கூரையில் 1 முதல் 2 கிலோவாட் திறன் கொண்ட சோலார் பொருத்துவதற்கு ரூ.30,000 மானியமும், ஒரு கிலோவாட்டுக்கு ரூ.18,000 கூடுதல் மானியமாக ரூ.78,000 வரை மத்திய அரசு வழங்க உள்ளது.

 

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், சொந்த வீடு மற்றும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் https://pmsuryagarh.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
Exit mobile version