ஆதார் அட்டை.. சிம் கார்டில் இருந்து வங்கி கணக்கு வரை, ஒவ்வொரு வேலைக்கும் இந்த அட்டை அவசியம். அத்தகைய முக்கியமான அட்டையில் தவறுகள் இருந்தால்? இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) விவரங்களை உள்ளிடும்போது தவறுகள் ஏற்பட்டால், அதை மாற்றிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
ஆதார் அட்டையில் உள்ள தவறுகளை திருத்தவும், புதுப்பிக்கவும் வாய்ப்பளித்துள்ளது. இருப்பினும், சில விவரங்களை மீண்டும் மீண்டும் மாற்ற முடியாது. குறிப்பாக பெயர், பாலினம், பிறந்த தேதி போன்ற விவரங்களை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -
ஆதார் விவரங்களை ஒருவர் எத்தனை முறை மாற்றலாம்?
பெயர் பதிவில் தவறுகள் இருப்பின் இருமுறை மாற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் குடும்பப் பெயரை மாற்றிக்கொள்ளலாம். ஆன்லைனில் அல்லது உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களில் மாற்றலாம்.
- Advertisement -
ஆதார் அட்டையில் விவரங்களை உள்ளிடும்போது தவறு ஏற்பட்டால் பாலினத்தை மாற்றும் வசதியை யுஐடிஏஐ ஏற்படுத்தியுள்ளது.
பிறந்த தேதியில் தவறு இருப்பின் இதனை ஒரு முறை மட்டுமே மாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி, மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், புகைப்படம், கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகியவற்றில் மாற்றங்களைச் சேர்ப்பதற்கு வரம்பு இல்லை. இந்த விவரங்கள் அடிக்கடி மாற வாய்ப்புள்ளது.
முகவரி, தொலைபேசி எண் மாறலாம், வயதுக்கு ஏற்ப உடல் மாறலாம். அதனால்தான் இந்த விவரங்கள் தொடர்பான திருத்தங்களுக்கு UIDAI எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை.