amit shah

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விமானம் அவசரமாக தரையிறக்கம்!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விமானம் நேற்று புதன்கிழமை நள்ளிரவு கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இரவு அமித் ஷா அகர்தலா செல்லவிருந்த நிலையில், அகர்தலாவில் மோசமான வானிலை காரணமாக அவரது விமானம் அசாம் தலைநகர் கவுகாத்தியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

திடீரென, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகளை அங்குள்ள அரசு செய்தது. இன்று காலை அங்கிருந்து அகர்தலா செல்கிறார். திரிபுரா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான ரத யாத்திரை அகர்தலாவில் தொடங்கவுள்ளது.