அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை இந்தியா மற்றும் இந்திய நிறுவனங்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என அதானி குழுமம் விளக்கமளித்துள்ளது.
ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் அதானி குழும பங்குகளின் வர்த்தகம் வீழ்ச்சி அடைந்து அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த பொதுத்துறை நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இது குறித்து 413 பக்க பதில் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ள அதானி குழுமம், ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளானது ஒரு தவறான சந்தையை உருவாக்குவதற்கான மறைமுக நோக்கத்துடன் சொல்லப்பட்டவை எனக் கூறியுள்ளது.
குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் மீதான தேவையற்ற தாக்குதல் மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் இந்திய நிறுவனங்களின் சுதந்திரம், ஒருமைப்பாடு, தரம், வளர்ச்சி மற்றும் லட்சியம் ஆகியவற்றின் மீது குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் அதானி குழுமம் கூறியுள்ளது.