ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரபலமான மலைவாசஸ்தலமான சோனாமார்க்கை பனிச்சரிவு சூழ்ந்துள்ளது.
சுனாமி போல் பாரிய பனி சரிவு. இருபுறமும் கடும் பனி விழுந்ததால், சோஜிலா சுரங்கப்பாதையில் இருந்த தொழிலாளர்கள் பீதியில் ஓடினர். அவர்கள் தங்கள் முகாம்களுக்குள் சென்று ஒளிந்து கொண்டனர்.
சோஜிலா சுரங்கப்பாதையில் பணிபுரியும் கட்டுமான நிறுவனத்தின் பொது மேலாளர் ஹர் பால் சிங் இந்த கொடூரமான அனுபவத்தை தனது கேமராவில் படம் பிடித்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இருப்பினும், இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று ஹர் பால் விளக்கினார்.
A low-intensity snow avalanche hit the #Sarbal area of #sonamarg, #Kashmir.
Luckily, no one was reported injured. The J&K #Police and #SDRF are on the spot.#IADN pic.twitter.com/NgLuwPuORa
— Indian Aerospace Defence News – IADN (@NewsIADN) January 15, 2023
