ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்!
ஜார்கண்ட் மாநில முதல்வராக ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் பதவியேற்றார். சமீபத்தில் நடந்த ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதன் மூலம், மாநிலத்தின் 14வது முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சி மொராஹாபாத் மைதானத்தில் அவருக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Posted in: இந்தியா