ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது பள்ளிகளுக்கான குளிர்கால விடுமுறைகள் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் மாத இறுதியில் பொதுவாக குளிர் கால விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில், ராஜஸ்தான் மாநில பள்ளிகளுக்கு டிசம்பர் மாதம் 25ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை பள்ளிகளுக்கான குளிர் கால விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் வழக்கத்தை விட அதிக பனி பொழிவு அங்கு நிலவி வருகிறது.
இதனால் முன்னதாக ஜனவரி 6ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று வெளியான அறிவிப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் ஜனவரி 6 , 7 ஆகிய தேதிகளில் மிக அதிக பனி பொழிவு நிலவக் கூடும் என்று வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது. இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் உள்ள பள்ளிகள் ஜனவரி 7ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும், ஜனவரி 8ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
