மிசோரம் மாநிலத்தின் சில பகுதிகளில் பலத்த காற்று, புழுதிப் புயல் மற்றும் ஆலங்கட்டி மழையால் நண்பகல் நேரமே நள்ளிரவாக மாறியது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. பிற்பகல் ஒரு மணியளவில் திடீரென வானம் கருமையாக மாறி கடுமையான ஆலங்கட்டி மழை தொடங்கியது.
- Advertisement -
இதனால் பல பகுதிகள் இருளாக காட்சியளித்தன. பலத்த காற்றினால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மிசோரமின் வடக்கு மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Today Mizoram weather 1pm#Mizoram pic.twitter.com/fCM4P5D4JN
- Advertisement -
— Pagin Haokip (@paaginhaokip) March 15, 2023
மதியம் ஒரு மணிக்கு எடுக்கப்பட்ட வீடியோ என ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ நள்ளிரவாக காட்சியளிக்கிறது. இதனிடையே மிசோரத்திற்கு நாளை வரை இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.