-Advertisement-
தலைநகர் டெல்லியில் இன்று அடர் பனிப்பொழிவு நிலவியது. இதனால் அங்கு எதிரே உள்ள பொருட்கள் கண்ணுக்கு புலப்படாத நிலை ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாகவே டெல்லியில் பல இடங்களில் பனிப்பொழிவு நீடிக்கிறது. லோதி சாலை, சப்தர்ஜங், விமான நிலைய மேம்பாலம், எய்ம்ஸ் போன்ற இடங்களில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருந்தது.
-Advertisement-
இது பனிக்காலம் என்பதால் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களிலும் வழக்கத்தைவிட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல படிப்படியாக இந்நிலை மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-Advertisement-