டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம்.. விமான சேவைகள் பாதிப்பு..!

 

டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. பல இடங்களில் 7 முதல் 10 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடும் குளிருடன் அடர்த்தியான பனிமூட்டம் நிலவுகிறது. அங்கு, 9 புள்ளி 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

கடும் குளிருடன் காற்றின் தரமும் வெகுவாகக் குறைந்துள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்குப் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் பகலிலும் விளக்குகளை எரியவிட்டபடி பயணிக்கின்றனர்.

இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவுவதால், டெல்லியில் விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டத்தால் டெல்லியில் தரையிறங்க வேண்டிய பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
 
 
Exit mobile version