ஜனவரி மாதத்தில் ரூ.1.56 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது இன்றுவரை இரண்டாவது பெரிய வசூல் ஆகும். முன்னதாக ஏப்ரல் 2022 இல் ரூ.1.68 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டது.
ஜனவரி 31ஆம் தேதி மாலை 5 மணி வரை ரூ.1,55,922 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், சிஜிஎஸ்டியாக ரூ.28,963 கோடி வசூலானது. இது தவிர, எஸ்ஜிஎஸ்டியாக ரூ.36,730 கோடியும், ஐஜிஎஸ்டியாக ரூ.79,599 கோடியும் வசூலிக்கப்பட்டது.
https://twitter.com/ANI/status/1620445230012186625?s=20&t=ulgZij-xg3fVSwbJ57iPFg
ஐ.ஜி.எஸ்.டி., தொகையில், பொருட்கள் இறக்குமதி வரியாக, 37,118 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. நிதி அமைச்சகத்தின் தரவுகளின்படி, 10,630 கோடிகள் செஸ் ஆக வசூலிக்கப்பட்டது. இதில், சரக்கு இறக்குமதிக்கான கூடுதல் வரியாக ரூ.768 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.