மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 12வது மாதமாக ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய நிதித்துறையின் தகவலின்படி, மார்ச் மாதத்தில் ரூ.1,60,122 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளது. மத்திய ஜிஎஸ்டி ரூ.29,546 கோடி என்றும், மாநில ஜிஎஸ்டி ரூ.37,314 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஐஜிஎஸ்டியின் கீழ் ரூ.82,907 கோடிகள் வசூலிக்கப்பட்டுள்ளன. ஐஜிஎஸ்டி வசூல் அடிப்படையில் முதன்முறை சாதனையாகும். இதற்கு முன் இந்த அளவில் ஐஜிஎஸ்டி வசூலித்ததில்லை. மேலும், மார்ச் மாதத்தில் செஸ் வரியாக ரூ.10,355 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.