பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூ.500 ரொக்கம் – ஆளுநர் ஒப்புதல்!

 

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொருளுக்கு பதிலாக ரூ. 500 வழங்கும் கோப்புக்கு துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தை போல புதுச்சேரியிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில், பொங்கல் பண்டிகைக்கு புதுச்சேரி அரசு சார்பில் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியானது. அதில் பொங்கல் பொருளுக்கு பதிலாக ரூ.500 மக்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 3.53 லட்சம் பேருக்கு ரூ.500 வழங்க அரசு திட்டமிட்டது.

 

இந்நிலையில், பொங்கல் பொருளுக்கு பதிலாக ரூ. 500 வழங்கும் கோப்புக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மூலமாக வழங்கப்படும் பொங்கல் சிறப்பு பொருட்களுக்கு இடாக தொகை ரூ.500 வழங்குவது தொடர்பான கோப்புக்கு மாண்புமிகு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
Exit mobile version