நாட்டில் கடந்த மாதம் கடுமையான குளிர் நிலவுவதால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இந்த கடுமையான பனிப்பொழிவு ஜனவரி மாதம் வரை நிலவியதால் விடுமுறை நாட்கள் மேலும் நீட்டிக்கப்பட்டது. இதில் குறிப்பாக சண்டிகரில் கடுமையான குளிர் காரணமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அதன்படி 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு குளிர்கால விடுமுறை ஜனவரி 14ஆம் தேதி வரையிலும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஜனவரி 9ம் தேதி வரையிலும் விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
- Advertisement -
இந்த நிலையில் இன்று நாட்டின் 74வது குடியரசு தின விழாவானது பரேட் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சண்டிகரின் நிர்வாக ஆலோசகர், சண்டிகரில் இருக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற ஜனவரி 28ம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.