UPI மூலம் பணம் செலுத்தும் பயனர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. UPI Lite வாலட் வரம்பை ரூ.5000 ஆக உயர்த்தி, ஒவ்வொரு முறையும் அதிகபட்சமாக ரூ.1000 வரை பணம் செலுத்த அனுமதித்துள்ளது.
UPI அடிப்படையிலான கட்டண முறையை மேலும் மேம்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது. யுபிஐ லைட் மூலம், மொபைலில் இணையம் இல்லாவிட்டாலும் பணம் செலுத்த முடியும். அதாவது ஆஃப்லைனிலும் பணம் செலுத்தலாம்.
UPI Lite என்பது UPI பின் தேவையில்லாமல் சிறிய பரிவர்த்தனைகளை அனுமதிக்கும் ஒரு வாலட் ஆகும். PhonePay, GooglePay மற்றும் UPI Pay ஆகியவை டிஜிட்டல் பேமெண்ட்டில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. தற்போது, பணப்பரிவர்த்தனையை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது.