நாட்டில் தற்போது பெரும்பாலான முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். இதனால் வேலையில்லா இளைஞர்கள் நிலை கேள்விக்குறிக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில் இளைஞர்களை மகிழ்ச்சியூட்டும் விதமாக பீகார் மாநில ஆளுநர் சூப்பரான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டின் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் காந்தி மைதானத்தில் அம்மாநில ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் சவுகான் கூறியதாவது, மாநிலத்தில் அரசு துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் கூடுதலாக உருவாக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். அத்துடன் அரசுக்கு தேவையான துறைகளில் கூடுதலான பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் கடந்த 5 மாநிலங்களில், அரசு பல்வேறு துறைகளில் 28,000 பேருக்கு பணியிடத்திற்கான பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.