மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரியில் இந்திய கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு பணிகளுக்காக புதுச்சேரிக்கு செல்பவர்கள் கடலூர் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மறுபுறம், கடலூரில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும் திண்டிவனம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.