ஜனவரி 1 முதல் ரூ.450க்கு சிலிண்டர் விநியோகம் – மாநில அரசு அதிரடியாக குறைப்பு!!

 

மாநிலம் முழுவதும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரூ.450க்கு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளில் ரூ.450க்கு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தற்போது ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், வாக்குறுதியளிக்கப்பட்ட சிலிண்டர் விலை மாற்றத்தை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அரசு அறிவிப்பின்படி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் காஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்தும் மக்கள் தற்போது ரூ.500க்கு சிலிண்டர் வாங்குகிறார்கள். தற்போது அதிலிருந்து ரூ.50 குறைத்து ரூ.450க்கு விநியோகம் செய்யப்படும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்தது.

 

இந்த கூடுதல் மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்றும், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் பஜன் லால் சர்மா தெரிவித்தார். உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பயன்படுத்தலாம். அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

 
 
Exit mobile version