இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சலீம் துரானி (வயது 88) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
காபூலில் பிறந்த இவர் இந்தியாவுக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கிலும் 1,202 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 104 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராகும்.
இடது கை ஆல்ரவுண்டரான இவர், 1961-62ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் 8 விக்கெட்டுகளையும், சென்னையில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வெல்ல உதவினார்.
இவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.