ஆஃபர் மழையில் நனைய தயாரா.. விரைவில் ‘பிக் பில்லியன் டேஸ்’ விற்பனை.. தேதியை அறிவித்தது பிளிப்கார்ட்!
முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட், பண்டிகைக் காலத்தில் ஆஃபர்களின் திருவிழாவைத் தொடங்கியுள்ளது. வருடாந்திர ‘பிக் பில்லியன் டேஸ்’ விற்பனை தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. பிக் பில்லியன் டேஸ் விற்பனை செப்டம்பர் 27 முதல் தொடங்கும் எனத் தெரியவந்துள்ளது. பிளஸ் உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்னதாக அதாவது செப்டம்பர் 26 முதல் விற்பனை கிடைக்கும் என்று பிளிப்கார்ட் தெளிவுபடுத்தியுள்ளது.
இதன் மூலம் இம்முறை விற்பனையில் வாடிக்கையாளர்கள் பெரும் சலுகைகளை பெற வாய்ப்பு உள்ளது. அந்த சலுகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும். மேலும் எலக்ட்ரானிக் கேட்ஜெட்கள், உடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு, ‘பிக் பில்லியன் டேஸ்’ விற்பனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றே கூறலாம்.
Flipkart Big Billion Days 2024-ஐ முன்னிட்டு, அனைத்து வகைகளிலும் பெரிய தள்ளுபடிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் தளமானது ஸ்மார்ட் டிவிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் 80 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்க வாய்ப்புள்ளது. மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள், கேமிங் சாதனங்கள் மற்றும் கேஜெட்டுகளுக்கு 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.
குளிர்சாதன பெட்டிகள் மற்றும் 4K ஸ்மார்ட் டிவிகள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 75 சதவீத தள்ளுபடி கிடைக்கும். ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரை, நத்திங், ரியல்மி மற்றும் இன்பினிக்ஸ் போன்ற பிரபலமான பிராண்டுகள் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் குறிப்பிடத்தக்க தள்ளுபடியுடன் வரும்.
குறிப்பிட்ட காலத்திற்கு சில பிரபலமான ஸ்மார்ட்போன் மாடல்களில் பல வங்கி சலுகைகள் உள்ளன. ஐபோன் போன்ற பிரீமியம் ஸ்மார்ட்போன்களை வாங்க திட்டமிட்டால், இந்த தளத்தில் சில கூடுதல் சலுகைகளை பெறலாம். மறுபுறம், முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை தேதிகளை விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது.