பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான ‘பிளிப்கார்ட்’ மீண்டும் தள்ளுபடி சலுகைகளுடன் விற்பனை திட்டத்தை அறிவித்துள்ளது. நாளை 16ஆம் தேதி தொடங்கும் ‘பிக் சேவிங் டேஸ்’ விற்பனை 21ஆம் தேதி நிறைவடைகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்ட் இந்த விற்பனையை அறிவித்துள்ளது.
குறிப்பாக இந்த விற்பனையில் ஸ்மார்ட் போன்களுக்கு நல்ல தள்ளுபடியை பிளிப்கார்ட் வழங்குகிறது. மேலும் பல மின்னணு பொருட்கள் மீது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே தள்ளுபடி விற்பனை தொடங்கிவிட்டது.
ரூ.5,000க்கு மேல் ஷாப்பிங் செய்பவர்களுக்கு வங்கி அட்டைகளில் கூடுதல் சலுகைகள் உள்ளன. கிரெடிட் கார்டு EMI இல் 10 சதவீத தள்ளுபடியை அதிகபட்சமாக ரூ.1250 வரை வழங்குகிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு இஎம்ஐயில் 10 சதவீதம் (ரூ.1,250) தள்ளுபடியும், கோட்டக் பேங்க் டெபிட் கார்டில் 10 சதவீதம் (ரூ.1,250) கிடைக்கும். Flipkart Axis கார்டு வைத்திருப்பவர்களுக்கு 5 சதவீத கேஷ்பேக் சலுகை உள்ளது.