-Advertisement-
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்ட நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக அதிகாலை ஒரு மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதுவை அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் சாதாரண நாட்களிலேயே சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் புதுச்சேரியில் 1 மணி வரை மட்டுமே கொண்டாட்டம் என்ற கட்டுப்பாடு அதிருப்தியை ஏற்படுத்தியது.
-Advertisement-
இந்த நிலையில் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறும் என்பதால் கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதித்துள்ளதாகவும் அதிகாலை 2 மணி வரை புத்தாண்டு கொண்டாடலாம் என அரசு அறிவித்துள்ளது. இது புதுச்சேரி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-Advertisement-