லோக்சபா தேர்தல் 2024: கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம்..!

 

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் துவங்கும் என்று தெரிவித்தது. இந்த சூழ்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 1 ஆம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதித்துள்ளது.

லோக்சபா, 4 மாநில சட்டசபைகள் மற்றும் இடைத்தேர்தல்களுக்கு ஓட்டுப்பதிவு முடியும் வரை, கருத்துக்கணிப்பு நடத்தவும், வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிகளின்படி, வாக்குப்பதிவின் போது கருத்துக்கணிப்பு மற்றும் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

 

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், வாக்குப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக மின்னணு ஊடகங்களில் கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பின்னரே எக்ஸிட் போல்களை வெளியிட முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுடன், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மறுபுறம், 12 மாநிலங்களில் உள்ள 25 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

 
 
 
Exit mobile version