இந்திய குடியரசு தின வரலாற்றில் முதல்முறையாக எகிப்திய ஆயுதப் படைகள் அணிவகுப்பு இன்று நடைபெறுகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு கர்த்தவ்யா சாலையில் இந்திய பாதுகாப்பு படையின் அணிவகுப்பு, கலாச்சார அணிவகுப்பு , பாரம்பரிய நடனம் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு குடியரசு தினத்தின் போதும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் நாட்டின் பாதுகாப்பு படையினரும் அணிவகுப்பில் கலந்து கொள்வர். அந்த வகையில் எகிப்து அதிபர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள நிலையில் எகிப்திய ஆயுதப் படைகளின் 144 உறுப்பினர்களை உள்ளடக்கிய அணிவகுப்பு நடைபெறுகிறது.
அணிவகுப்புக் குழு கர்னல் மஹ்மூத் முகமது அப்தெல்பத்தா எல்கரசாவி தலைமையில் கலந்து கொள்ளும் குழுவுக்கு நீண்ட கால வரலாறு உள்ளது. கி.மு 3 ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான எகிப்திய ஆயுதப் படையில், நவீன எகிப்திய இராணுவம் முகமது அலி பாஷாவின் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய குடியரசு தின வரலாற்றில் எக்ப்திய படை கலந்து கொள்வது இதுவே முதல் முறை ஆகும்.