மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கடந்த ஜனவரி மாதம் வாங்கியது அனைவரும் அறிந்ததே. இதையடுத்து அந்நிறுவனம் விமான சேவை மற்றும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.
அதன்படி மும்பையில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விமானம் வாரத்திற்கு 3 முறை இயக்கப்படவுள்ளது.