இந்தியாவில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் இதுவரை 99% பேர் ஆதார் எண்ணுடன், ரேஷன் கார்டை இணைத்துள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், பாமாயில் மற்றும் இதர சமையல் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு சரியான முறையில் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இது போன்ற பொருட்கள் வழங்குவதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க ரேஷன் அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்கவும், டிஜிட்டல் மயமாக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர் ஒருவர் நாட்டில் எத்தனை சதவீதம் பேர் ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைந்துள்ளார்கள்? என கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விக்கு பதிலளித்த மத்திய மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி, “நாட்டில் உள்ள மொத்தம் 19 கோடியே 72 லட்சம் ரேஷன் அட்டைகளில், 99% ரேஷன் அட்டைதாரர்கள் ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ரேஷன் கார்டுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி கிட்டத்தட்ட 100% நிறைவடைந்துள்ளதாகவும் பதிலளித்துள்ளார்.
Leave a Comment