flight 4

விமானத்தில் அத்துமீறி நடக்கும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் – டிஜிசிஏ அறிவுறுத்தல்..!

விமானத்தில் அத்துமீறி நடக்கும் பயணிகளைப் பிடித்து விமானநிலைய அதிகாரிகளிடம் ஒப்படைப்பது உள்ளிட்ட முறைகளைப் பயன்படுத்துமாறு விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற சில சம்பவங்களில் விமானியோ அவருடைய பணிக்குழுவினரோ தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் டிஜிசிஏ விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு, உடைமைகளின் பாதுகாப்பு, விமான ஒழுங்குவிதிகளை கடைபிடித்தல் போன்றவற்றை குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.