அயோத்தியில் திரளும் பக்தர்கள்.. தரிசனத்திற்காக பெரும் வரிசை!!

 

அயோத்தி ராமர் கோயிலில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் பொது பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால், அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அயோத்திக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று செவ்வாய்கிழமை முதல் ராம் மந்திரில் உள்ள பால் ராமரை தரிசிக்க பொது பக்தர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அயோத்தியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக இன்று அதிகாலை 3 மணி முதலே தரிசனத்திற்காக பெரும் வரிசையில் காத்திருக்கின்றனர்.

 

இன்று காலை ஏழு மணிக்கு பால ராமருக்கு ஆரத்தி செய்யப்பட்டது. அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்கு செல்பவர்கள் ஏதேனும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இருப்பினும், காலை ஆரத்தி நிகழ்ச்சிக்கு வரையறுக்கப்பட்ட இலவச பாஸ்கள் வழங்கப்பட்டன. மறுபுறம் அயோத்திக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால், அரசு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

 
 
Exit mobile version