உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, கடந்த 8 மாதங்களில் கோயில் காணிக்கை ஆயிரம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
குறிப்பாக 2022 ஏப்ரல் தொடங்கி நடப்பு நிதியாண்டில் நவம்பர் வரை காணிக்கை வசூல் ரூ.1,029.14 கோடியாக இருந்துள்ளது.
