அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று உயர்மட்டக் கூட்டம் நடத்தினார்.
இதில் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கடந்த 9ம் தேதி அருணாச்சல பிரதேச எல்லையில் உள்ள தமாங் என்ற இடத்தில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் இருதரப்பு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிக்க உள்ளார். இதற்கு முன் அவர் நிலைமையை முழுமையாக அறிய ஆய்வு நடத்தியதாக தெரிகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க பல தரப்பினரும் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.