
டானா புயல் காரணமாக இந்தியா முழுவதும் 232 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து புறப்படும் 11 ரயில்களும், பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகம் வரும் 7 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்கிழக்கு ரயில்வே ரயில் சேவைகளுக்காக அவசர கட்டுப்பாட்டு அறையையும் அமைத்துள்ளது.