இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக 20,000 பாதிப்புகள் வந்தாலும் சமீபத்திய பாதிப்பு சற்று குறைந்துள்ளன. அதேவேளையில் இறப்பும் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 54 பேர் வைரஸால் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் இறந்துள்ளனர். அதே நேரத்தில் 19,342 பேர் வைரஸிலிருந்து மீண்டுள்ளனர்.
தற்போது நாட்டில் 1,43,676 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை விகிதம் 0.33 சதவீதமும், மீட்பு விகிதம் 98.48 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 4,33,49,778 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்த வைரஸால் இதுவரை 5,26,357 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் 1.20 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மறுபுறம், நாட்டில் இதுவரை 2,04,25,69,509 டோஸ் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,36,029 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh