இயேசு கிறிஸ்து அவதரித்த தினமான இன்று, உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, இந்தியாவில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உலகப் புகழ்பெற்ற வாடிகன் சிட்டியில் கிறிஸ்துமஸ் பெருவிழா கோலாகலாமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் சிட்டி முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. போப் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும், இயேசு கிறிஸ்துவின் போதனை பாடல்களை பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதேபோல், இந்தியா முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலகமாகக் கொண்டாப்பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பார்க் சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வந்தன.
கொல்கத்தா புனித ஜெபமாலை தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை யொட்டி நடைபெற்ற சிறப்பு ஆராதானையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாஹிமில் உள்ள செயின்ட் மைக்கேல் தேவாலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு இயேசு பிரானை வழிபட்டனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் தேவாலயத்தில் சிறப்பு நள்ளிரவு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். பின்னர், ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பாளையம் புனித ஜோசப் பெருநகர் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி தேவாலயம் முழுவதும் வண்ண விலக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தது. நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்றனர்.