-Advertisement-
எல்லையில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், பராலே வகை ஏவுகணைகளை எல்லை பகுதிகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான பரிந்துரையை மத்திய பாதுகாப்பு அமைச்சகம், உயர்மட்ட குழுவில் ஆலோசனை நடத்தி ஒப்புதல் தரவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
-Advertisement-
150 முதல் 500 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் பராலே வகை ஏவுகணைகளால் எல்லையில் இந்திய படைகளின் பலம் அதிகரிக்கக்கூடுமென ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இரு முறை சோதிக்கப்பட்ட பராலே வகை ஏவுகணைகளை மேம்படுத்தும் பணிகளை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
-Advertisement-