இந்தியா முழுவதும் அனைத்து மாநில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மதிய உணவு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பள்ளிகளில் பசியின்றி கல்வி கற்று வருகின்றனர். முதன் முதலில் இந்த திட்டம் தமிழகத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தால் மாணவர்கள் பயனடைந்து வந்ததை கருத்தில் கொண்டு பிற மாநிலங்களிலும் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் மேற்கு வங்க மாநிலத்தில் மாணவர்களுக்கு மதியம் சாதம், பருப்பு, காய்கறி, சோயாபீனஸ், முட்டை உள்ளிட்ட உணவுகள் நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவைகளை தொடர்ந்து மாணவர்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் நோக்கில் மதிய உணவுத்திட்டத்தில் கீழ் மாணவர்களுக்கு கோழிக்கறி வழங்கவுள்ளதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.
- Advertisement -
அம்மாநிலத்தில் மதிய உணவு திட்டத்தால் பயனடைந்து வரும் 1.16 கோடி மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை உணவுடன் சேர்த்து சிக்கன் மற்றும் பழங்கள் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் இத்திட்டத்திற்காக அரசு ரூ. 371 கோடி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.